நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாக்காளர்களிடமிருந்து தன்விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண் சேகரித்தல் – வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைத்தல் சிறப்பு முகாம் 18.09.2022 நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ், தகவல்.
நாகப்பட்டினம் செப்டம்பர் 16
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950-இன் பிரிவு 23(5)-ல் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரும் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்கு உரிய சட்ட திருத்தத்தினை கொண்டு வந்துள்ளது இப்பணியானது கடந்த 01.08.2022 முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இப்பணியினை எதிர்வரும் 01.04.2023 க்கு முன்னர் செய்து முடித்திட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இப்பணி நாகப்பட்டினம் மாவட்டத்தில் 51 நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள வாக்காளர்களின் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்கு எதிர்வரும் 18.09.2022 (ஞாயிற்று கிழமை) அன்று சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி அனைத்து வாக்காளர்களும் தங்களுக்குரிய வாக்குசாவடி நிலையங்களுக்கு சென்று வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் படிவம் 6டீ-யினை அளித்து ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம். மேலும் வாக்காளர்கள் நேரடியாகவே தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் செயலிகள் மூலம் இணையவழியாகவும் இணைத்துக்கொள்ளலாம்.

எனவே இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தினை எவ்வித தொய்வின்றி 100 சதவீதம் செயல்படுத்திட அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைப்பு நல்கி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைத்துக்கொள்ள வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

