திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடியை இன்று காணொளி காட்சி மூலம் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திரபாபு., இ.கா.ப திறந்து வைத்தார் அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கே. எஸ். பாலகிருஷ்ணன்., BVSc,அவர்கள் ரிப்பன் வெட்டி தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடியை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பாராஜ் அவர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.

