நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட டாடா நகரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்
நாகப்பட்டினம் செப்டம்பர் 16 நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட டாடா நகரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செய்து நடைமுறைபடுத்தி வருகிறார்கள். இந்நிலையில் நகரப் பகுதிகளிலும் கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது. பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பது மட்டுமல்ல. சிலருடைய குடும்ப சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது இதனை மனதில் கொண்டுதான் திட்டப்பட்ட திட்டம்தான் காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டம். பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்குவது, கற்றலை இனிமையாக்குவது என்ற நோக்கத்தில் “முதலைமைச்சரின் காலை உணவுத் திட்டம்” முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதிலும், ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்ததை ஏற்படுத்தும் என்பதிலும் சந்தேகம் இல்லை. மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதனைதொடர்ந்து நம் மாவட்டத்தில் நகராட்சி இஸ்லாம் தொடக்கப்பள்ளி நாகூர், நகராட்சி தொடக்கப்பள்ளி பெருமாள் கீழ விதி நாகூர், பால்பண்ணைச்சேரி, சர் அகமது தெரு தொடக்கப்பள்ளி, வேதநாயக்கன் செட்டித்தெரு தொடக்கப்பள்ளி, புத்தெரு தொடக்கப்பள்ளி, காளியம்மன் தெரு தொடக்கப்பள்ளி, மேலகோட்டைவாசல் தொடக்கப்பள்ளி ,கீழகொல்லைத்தெரு தொடக்கப்பள்ளி, கொட்டை மேட்டுத்தெரு தொடக்கப்பள்ளி, டாடா நகர் தொடக்கப்பள்ளி ஆகிய நாகப்பட்டினம் நகராட்சி உட்பட்ட 11 பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திட்டமானது தொடங்கி வைக்கப்படுகிறது.
தினசரி பல்வேறு விதமான சிற்றூண்டி வகைகள் வழங்கப்படுகின்றன. திங்கள் கிழமை உப்புமா வகை, செவ்வாய் கிழமை கிச்சடி வகை, புதன் கிழமை பொங்கல் வகை, வியாழன் கிழகை உப்புமா வகை, வெள்ளி கிழமை கிச்சடி உடன் இனிப்பு வகைகள் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் நகர மன்ற தலைவர் இரா.மாரிமுத்து நகராட்சி ஆணையர் என்.ஸ்ரீதேவி நகரமன்ற துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

