தூத்துக்குடி மாநகராட்சி அரசு தொடக்கப்ப
தூத்துக்குடி, செப்,16
தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி முதற்கட்டமாக குறிப்பிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் கிராமங்களில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப்பள்ளி மாணவ/ மாணவியருக்கு அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 56 அரசு தொடக்கப்பள்ளிகளிலும், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 8 அரசு தொடக்கப்பள்ளிகளிலும் மற்றும் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 2 அரசுதொடக்கப்பள்ளிகளிலும் 16.09.2022 வெள்ளிக்கிழமை அன்று இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . டூவிபுரம் நகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், கனிமொழி கருணாநிதி இன்று காலை துவக்கி வைத்தார்
இதில்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், மீன்வளம் – மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர், கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர். காலை உணவு திட்டத்தை துவக்கிவைத்த கனிமொழி எம்பி, மற்றும் அமைச்சர் கீதா ஜீவன், ஜெகன் பெரியசாமி, ஆகியோர் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை உண்டனர்.




இந்த நிகழ்ச்சிக்கு
மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்பி கனிமொழி கருணாநிதி அவர்கள் பேசுகையில் , தமிழக அரசு துவக்கியுள்ள இந்த காலை உணவு திட்டம் பிள்ளைகளின் ஆரோக்கியத்தையும் எதிர்காலத்தையும் உறுதி செய்யப்படுகிற திட்டமாக காணப்படுகிறது. நமது முதல்வர் அவர்கள் கொண்டு வந்துள்ள இந்தத் திட்டம் இந்தியாவில் பிற மாநிலங்களில் நடைமுறைப் படுத்தக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக சுமார் ஒரு லட்சம் பிள்ளைகளுக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 64 பள்ளிகளில் 3473 இந்த திட்டத்தின் மூலம் இன்றைய தினம் முதல் பயன் படுகிறார்கள். இந்த திட்டம் மூலம் தமிழகத்தில் எல்லா மாணவர்களும் பயன்படும் வகையில் இத்திட்டம் தமிழக முதல்வர் அவர்களால் விரிவாக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, நகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், துணைமேயர் ஜெனிட்டா செல்வராஜ், மண்டல தலைவர் அன்னலட்சுமி கோடு ராஜா, மாமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீனிவாசன் , சுரேஷ்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கோட்டு ராஜா, செல்வராஜ், மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் நகராட்சி பள்ளி ஆசிரியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

