நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சி துறை சார்பில் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுபோட்டியில் வெற்றிபெற்ற பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று பரிசுகளை வழங்கினார்.
நாகப்பட்டினம் செப்டம்பர் 15 நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சி துறை சார்பில் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுபோட்டியில் வெற்றிபெற்ற பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று பரிசுகளை வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
பள்ளி கல்லூரிகளில் பயிலும் இன்றைய தலைமுறையினர் படிப்பு ஒன்றே குறிக்கோள் என மனதில் கொண்டு படிக்க வேண்டும். நம்மைசுற்றி இன்றைய தலைமுறையினர் சீரழியகூடிய வகையில் எண்ணற்ற பல சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. அவற்றை பற்றி கவலை கொள்ளாமல் நமது இலக்கினை அடைவதை குறிக்கோளாக கொண்டு வாழ வேண்டும். இப்போட்டிகளில் சில மாணவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். சில மாணவர்கள் தோல்வியுற்று இருக்கிறார்கள் தோல்வியுற்ற மாணவர்கள் நமக்கு பரிசு கிடைக்கவில்லை என வருத்தப்படமால் அடுத்த முறை பரிசினை வெல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

பின்னர் பள்ளி கல்லூரிகளுக்கிடையேயான பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் பரிசுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முகக உதவியாளர்(பொது) சு.இராமன் மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுகரசு தமிழ்வளர்ச்சி துறை கண்காணிப்பாளர்(சென்னை) வசந்தகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி தோப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

