நாகப்பட்டினம் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தினை சிறப்புற கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என். கௌதமன் ஆகியோர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தனர்
நாகப்பட்டினம் செப்டம்பர் 15 நாகப்பட்டினம் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தினை சிறப்புற கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என். கௌதமன் ஆகியோர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டுப் பிரிவால், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தினை சிறப்புற கொண்டாடும் வகையில், 2022 ஆம் ஆண்டிற்கான நாகப்பட்டினம் மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நாகப்பட்டினம், மீன்வள பொறியியல் கல்லூரி வளாகம் முதல் கங்களாஞ்சேரி ரோடு பெருஞ்சாத்தான்குடி வரை நடைபெற்றது.

இப்போட்டிகளில் 13 வயதிற்குட்பட்ட மாணவர்கள் 15 கி.மீ. வரையிலும், 13 வயதிற்குட்பட்ட மாணவியர்கள் 10 கி.மீ. வரையிலும், 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் 20 கி.மீ. வரையிலும், 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவியர்கள் 15 கி.மீ. வரையிலும் கலந்துகொள்ள மீதி வண்டி ஓட்ட வேண்டும். மேற்படி மிதிவண்டி போட்டியில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவர்கள். மாணவியர்;களுக்கு முதல் பரிசாக தலா ரூ.5,000 இரண்டாமிடம் பரிசாக தலா ரூ.3,000 மூன்றாமிடம் பரிசாக தலா ரூ.2,000 4 முதல் 10 ஆம் இடம் வரை பெற்றவர்களுக்கு தலா ரூ.250 க்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் நாகப்பட்டினம், மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ், வழங்கி வெற்றி பெற்றவர்களை வாழ்த்தினார்கள்.
இவ்விழாவில் நாகப்பட்டினம் நகர மன்றத் தலைவர் இரா.மாரிமுத்து மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் முனைவர் மா.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

