ராமநாதபுரம்: பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவிடம், அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி அத்துமீறி நடந்து கொண்டதாகவும், அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தேசிய மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தவுள்ளது. அதனடிப்படையில் வருகிற 26-ம் தேதி எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க வேண்டுமென தேசிய மகளிர் ஆணையம் பொன்பாலகணபதிக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆணையம் வெளியிட்டுள்ளது.

