வேதாரண்யத்தில் வேதாரணியம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அவை கூடத்தில் நடைபெற்றது.
வேதாரண்யம் செப்டம்பர் 15
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் ஒன்றிய குழுத் தலைவர் கமலா அன்பழகன் தலைமையில் இன்று காலை ஊராட்சி ஒன்றிய அவை கூடத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் அறிவழகன்
வட்டார வளர்ச்சி ஆணையர் பா.ராஜு,
23 ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.வேளாண்மை துறை,சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை,மீன்வளத்துறை,
இளநிலை பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம்,வட்டார மருத்துவ அலுவலர்,கல்வி அலுவலர் மற்றும் அனைத்து நிலை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எழுப்பிய குடிநீர்,சாலை வசதி,தெரு விளக்கு,சுகாதார பிரச்சனைகள் பற்றிய கேள்விகளுக்கு அந்தந்த துறை அதிகாரிகளும் வட்டார வளர்ச்சி ஆணையரும் பதில் அளித்தனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

