வேதாரணியத்தில் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் அறக்கட்டளை இணை நிறுவனர் பத்மஸ்ரீ வே. அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா
வேதாரணியம் செப்டம்பர் 14
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் அறக்கட்டளை இணை நிறுவனர் பத்மஸ்ரீ வே.அப்பாக்குட்டி அவர்களின்
நூற்றாண்டு பிறந்த நாள் விழா 14.09.2022
புதன்கிழமை
கொண்டாடப்பட்டது. காலையில்
கள்ளிமேடு கே. எம் .பி .கேசவன் குழுவினரின் நாதஸ்வர மங்கள இசை மற்றும் குருகுலம்மாணக்கியர் பிரார்த்தனை பாடல்களுடன் விழா தொடங்கியது . விழா தொடக்கத்தில் தருமபுரம் திருத் தருமை ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
பொள்ளாச்சி மாரியம்மாள் மகாலிங்கம் கலை அரங்கத்தை திறந்து வைத்து ஆசியுரை வழங்கினார்கள். பின்னர் நடந்த விழாவில்
குருகுலத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பணியாளர்கள் மற்றும் இதர ஆசிரியர்கள் பணியாளர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பத்மஸ்ரீ வே. அப்பாக்குட்டி அவர்களின் நினைவுப் புகழுரை யை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. வி. ராஜேந்திரன் ,முன்னாள் பேரூராட்சித் தலைவர் சங்கர வடிவேலு,
பி ராஜகோபாலன், எஸ். பாலச்சந்திரன் ,D. சக்திவேலன் ,மேஜர் ஆர். ரத்தினகுமார் ஆகியோர் வழங்கினார்கள். பிற்பகலில் நடந்த விழாவில் பத்மஸ்ரீ அப்பாக்குட்டி அவர்களின் அன்புக்கோர் அண்ணாச்சி வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது .விழாவிற்கு நாகப்பட்டினம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். செல்வராசு தலைமை தாங்கினார்.
வேதாரணியம் சட்டமன்ற உறுப்பினர் ஓ. எஸ் மணியன் ,
வேதை சிவசண்முகம், எஸ். சொக்கலிங்கம், T. தியாகராஜன் ,கே சுதாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



மதுரை ஆதீனம் 293வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
வாழ்க்கை வரலாற்று நூலினை வெளியிட்டு ஆசியுரை வழங்கினார்கள். மேலும் இரண்டாவது தண்டி வேதாரணியம் என்ற ஆங்கில புத்தகத்தை வெளியிட்டு சிறப்பித்தார்கள். மாலையில் நடந்த நூற்றாண்டு விழாவில்
கயிலை மணி அ. வேதரத்தினம் (நிர்வாக அறங்காவலர் குருகுலம் அறக்கட்டளை) வரவேற்புரை ஆற்றவும் கவிஞர் இரா. மீனாட்சி தவான் தலைமை ஏற்கவும்
என். ஹரிகிருஷ்ணன் (தலைவர் குருகுலம் பெற்றோர் ஆசிரியர் சங்கம் )
வேதாரணியம் நகர்மன்றத் தலைவர் மா.மீ. புகழேந்தி ,
வேதாரண்யம் வர்த்தக சங்கத் தலைவர் எஸ். எஸ் தென்னரசு,
பி. சாகுல் அமீது (செயலாளர் குருகுலம் பெற்றோர் ஆசிரியர் சங்கம் )
முன்னிலை வகிக்கவும்
முனைவர் சோ. சேதுபதி
(தமிழ்த்துறைத் தலைவர் பாரதிதாசன் அரசு மகளிர் கலைக் கல்லூரி புதுச்சேரி)
வாழ்த்துரை வழங்கவும்
பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா
(நீதிபதி பஷீர் அகமது மகளிர் கல்லூரி சென்னை)
சிறப்புரை ஆற்றினார்.
விழா ஜெ. ஸ்ரீதர் நன்றி உரையாற்றினார். மாலையில் கோயம்புத்தூர் தியாகு குழுவினரின் சிறப்பு நடன நிகழ்ச்சி மற்றும் மேஜிக் ஷோவும் நடைபெற்றது. அ.கேடிலியப்பன் (அறங்காவலர் குருகுலம் அறக்கட்டளை )விழாவை ஒருங்கிணைத்து வழங்கினார்கள்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

