நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டம், பிரதாபராமபுரம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் மற்றும் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி முன்னிலையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் செப்டம்பர் 14 நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டம், பிரதாபராமபுரம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் அவர்கள் மற்றும் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி முன்னிலையில் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது நம் மாவட்டத்தில் மாதம் ஒரு கிராமம் தேர்வு செய்து மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களது குறைகளை நிவர்த்தி செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் துறை சார்ந்த பல திட்டங்கள் பற்றி தொடர்புடைய அலுவலர்களே மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள். இரண்டு துறைகள் ஒருங்கினைந்து மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதற்கான நடவடிக்கைஅதன் தொடர்ச்சியாக இன்றைய தினத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பிரதாபராமபுரம் கிரமாத்தை பொறுத்தவரையில் நாகப்பட்டினத்தில் வீடுகள் அதிகமாக கட்டப்பட்டு கொண்டிருக்கிற கிராமம் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த ஒரு கிராமத்திலே கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல இந்த கிராமத்தில் ‘நெகிழி’ ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை அரவை செய்து சாலை அமைப்பதற்கான ஒரு முன்னோடியாக உள்ளது. மற்றும் இந்த கிராமத்தில் சுமார் 16 ஏக்கர் அளவில் பெரிய குளம் வெட்டி அதை பறவைகள் சரணலாயம் போல் மாற்றி மூங்கில் காடுகள் போல செய்ய அரசு உதவியும் செய்யப்படுகிறது.

இவை அனைத்தையும் ஊராட்சி மன்ற தலைவர் முன்னேடுத்து செய்து வருகிறார்.
மேலும் கிராமத்தில் மூன்று திட்டங்கள் கம்மன்காடு, புளிக்காடு மண்டுவாய், யாதவபுரம் பூச்சி மண்டுவாய் கோவில்தெரு, கப்பலோடி மண்டுவாய், இந்த மூன்று இடங்களிலும் சிமெண்ட் கான்கீர்ட் தடுப்பு அணை கட்டுதல் உத்தரவு கொடுத்து வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த கிராமத்திற்கு சுமார் 1.25 கோடி மதிப்பீட்டில் 12 பணிகளுக்கான உத்தரவு இன்றைய தினத்தில் ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாண்புமிகு முதலமைச்சர் நோக்கம் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் அதனால் தகுதியானவர்கள் கண்டிபாக பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தெரிவித்தார்.
இம்முகாமில் ஒருங்கினைந்த குழந்தை திட்டம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1,500 மதிப்பீட்டில் ஊட்டச்சத்து பரிசு பெட்டகத்தினையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் 28 பயனாளிகளுக்கு ரூ.28,000 மதிப்பீட்டில் உதவித்தொகையினையும், வட்ட வழங்கல் அலுவலகத்தின் மூலம் 18 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினையும், 148 பயனாளிகளுக்கு ரூ.69,08,000 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாவினையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.14,740 மதிப்பீட்டில் இலவச சலவைப்பெட்டி மற்றும் தையல் இயந்திரத்தினையும், தோட்டக்கலைத்துறை மூலம் பயன்பெறும் 5 பயனாளிகளுக்கு ரூ.37,566 மதிப்பீட்டில் இடுபொருள்கள், வேளாண்மைத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.3,750 மதிப்பீட்டில் இடுபொருள்கள் போன்ற நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 227 பயனாளிகளுக்கு சுமார் ரூ.69லட்சத்து 93ஆயிரத்து 556 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா வருவாய் கோட்டாச்சியர் ந.முருகேசன் கீழ்வேளுர் வட்டாச்சியர் து.ரமேஷ் வேளாங்கண்ணி பேருராட்சி துணை தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் பிரதாபராமபுரம் ஊராட்சிமன்ற தலைவர் ஆர்.வி.எஸ்.சிவராசு ஒன்றிய குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

