தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவை
நிறுவனர் மற்றும் தலைவர்
அராபத் அவர்களின் தலைமையில் வியாபாரிகளின் பாதுகாப்பையும் அவர்களின் உரிமையை மீட்டு எடுப்பதற்காக வியாபாரிகளின் குரலாக ஒலித்து வரும் இந்த அமைப்பு , தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவை
சார்பில் தமிழகம் முழுவதும்
மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் என பேரவையின் சார்பில் நிர்வாகிகள் நியமிக்கக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில்
தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின்
ஐக்கிய பேரவை
நிறுவனர் மற்றும் தலைவர்
அராபத் உத்தரவின் பெயரில் மாநிலச் செயலாளர் ஹரிணி , இரா முருகன் அவர்களின் பரிந்துரையின் பேரில் வேளச்சேரி ர. சாகுல் அமீது (எ) சாகுல் பாபா அவர்களை
தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவையின் மாநில இளைஞரணி தலைவராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளனர். இவருக்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள், முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வியாபாரிகளின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் ஐக்கிய பேரவையின் மாநில நிர்வாகிகளின் ஆலோசனையின்படி திறம்பட செயல்படுவதாக வேளச்சேரி சாகுல் அமீது தெரிவித்துள்ளார். தமிழக அரசின் மின் கட்டண உயர்வு மூலம் வியாபாரிகள் கடுமையான பாதிப்புகள் அடைந்துள்ளதாகவும் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி
தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவையின் நிறுவனர்/ தலைவர், மற்றும் மாநிலச் செயலாளர் ஆகியோரின் அனுமதியோடு மாநில இளைஞரணி சார்பில் சென்னையில் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளதாகவும் மாநில இளைஞரணி தலைவர் வேளச்சேரி சாகுல் அமீது தெரிவித்துள்ளார்.
செய்தி தொகுப்பு
ஆசிரியர்
எம். ஆத்தி முத்து.

