வேதாரணியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேதாரணியம் வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் உட்கோட்ட நிர்வாக நடுவர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்
வேதாரண்யம் செப்டம்பர் 13
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கோட்டம் மற்றும் வட்டம் வெள்ளப்பள்ளம் கிராமம் மீனவர் காலனி என்ற முகவரியைச் சேர்ந்த காமராஜ் தகப்பனார் பெயர் சொக்கலிங்கம் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தை தனது ஊர் மீனவ பஞ்சாயத்தார் தானமாக கேட்டார்கள் என்றும் தான் கொடுக்க மறுத்து விட்டதால் தனது குடும்பத்தை ஐந்து வருடகாலமாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும்,தனது நிலத்தை மீட்டுத்தரக் கோரியும் தன்மீது ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரியும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துயர்துடைப்பு நாளில் நேற்று(12.09.2022) அளித்துள்ள மனு தொடர்பாக இன்று (13.09.2022)
வேதாரணியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேதாரண்யம் வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் உட்கோட்ட நிர்வாக நடுவர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில் உதவி இயக்குனர் மீன்வளம்,வருவாய் வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் தலைஞாயிறு,காவல் உதவி ஆய்வாளர் வேட்டைக்காரனிருப்பு
வட்ட துணை ஆய்வாளர்,
கிராம நிர்வாக அலுவலர் வெள்ளப்பள்ளம், ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளப்பள்ளம்,ஆய்வாளர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வேதாரணியம் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மேற்கண்ட கிராமத்தில் வசிக்கும் மனுதாரர் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.ஏற்கனவே மனுதாரர் தனது இந்த நிலப் பிரச்சினை தொடர்பாக தீர்வு காண வேதாரணியம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்று கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.இவ்வினத்தில் மேற்படி நில பிரச்சினைக்கு தன்னால் கொடுக்கப்பட்ட நீதிமன்ற வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் காமராஜ் என்பவரால் உறுதி அளிக்கப்பட்டது.மேற்படி நீதிமன்ற வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்ட பின்னர் பிரச்சினைக்குரிய நிலத்தை ஊர் பொது பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் நாகப்பட்டினம் பெயரில் இனாம் சாசனமாக ஒரு மாதத்திற்குள் பத்திரப்பதிவு செய்து தர மனுதாரர் காமராஜ் என்பவரால் உறுதியளிக்கப்பட்டது.
மனுதாரர் காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எவ்வித தொழில் மற்றும் சமுதாய கட்டுப்பாடுகளை விதிப்பது இல்லை என்றும், மனுதாரர் காமராஜ் என்பவரின் தொழிலுக்கு வெள்ளப்பள்ளம் மீனவர் காலனி பொதுமக்கள் மற்றும் மீனவ பஞ்சாயத்தார்கள் தொடர்ந்து உரிய ஒத்துழைப்பு வழங்குவது என்று மீனவ பஞ்சாயத்தார்களால் உறுதியளிக்கப்பட்டது.
பின்னர் இக்கூட்டம் நடவடிக்கைகளை ஏற்கும் விதமாக கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரிடமும் கையொப்பம் பெறப்பட்டது.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா. நாகை மாவட்ட செய்தியாளர்.

