தூத்துக்குடி கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ் ஜீவமணி தர்மராஜ் தலைமை காவலர் ராமர் முதல் நிலை காவலர் இருதயராஜ் மற்றும் பழனி ஆகியோர் கிடைத்த ரகசிய தகவலின் படி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உட்கோட்டம் குலசேகரப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் அதிகாலை 3 மணி அளவில் சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்த சுமார் 1.5 டன் பீடி இலைகளுடன் Bolera Pick up TN 72 BV 7679 வாகனத்தையும், TN 69 BL 4916 Pulsar வண்டியையும், சிபிஸ்டன் 25/22, S/O ஜேசுராஜ், மணி நகர், முக்கானி என்பவரையும் பிடித்து விசாரணை.
விசாரணையில் ஆலந்தலை சார்ந்த லெனாக்ஸ் மகன் இருதய ஜெரின் என்பவருக்கு சொந்தமான பொருள் என்று தெரிகிறது. மேற்படி இருதய ஜெரின் என்பவரையும் தேடி வருகின்றனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் 25 லட்சம் ஆகும்.


