வேதாரணியம் செப்டம்பர் 13
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள
வேதாரண்யம், கரியாப்பட்டினம், வாய்மேடு, தலைஞாயிறு, வேட்டைக்காரனிருப்பு
மற்றும் வேதாரணியம் மகளிர் காவல் நிலையம் ஆகிய ஆறு காவல் நிலையங்கள் உள்ளன.
ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் காவலர்கள், ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர்
சிறப்பு நிலை உதவி ஆய்வாளர்
என பணி புரிய வேண்டும்.மொத்தம் இந்த ஆறு காவல் நிலையங்களிலும் 148 காவலர்கள் பணிபுரிய வேண்டும்.ஆனால் தற்போது வெறும் 49 காவலர்களே இந்த காவல் நிலையங்களில் பணிபுரிகிறார்கள.அதாவது இது 30 சதவீதம் ஆகும்.
ஆகையால் தற்போது இந்த காவல் நிலையங்களில் போதுமான
காவலர்கள் இன்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கையாளுவதில் மிகுந்த சிரமங்கள் ஏற்படுகின்றன. வேதாரணியம் சுற்றுவட்டார பகுதிகளில்
தொடர் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன .வாகன தணிக்கை செய்ய முடியாத நிலையும்
ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு இங்குள்ள
காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களை பாதுகாப்புக்கு அனுப்பி வைப்பதால்
இங்கு உள்ள காவல் நிலையங்களில் பாதுகாப்பு
குறைபாடுகள் ஏற்பட காரணமாக அமைகின்றன.மேலும் இங்குள்ள காவல் நிலையங்களில் குற்றச் சம்பவங்களை விசாரிக்க செல்ல பயன்படும் வாகனங்கள் மிகவும் பழுதடைந்து உள்ளன. வேதாரண்யம் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் மற்றும் பழுதடைந்த வாகனங்களை மாற்றி புதிதாக வாகனங்கள் வழங்கவேண்டும் எனவும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

