தூத்துக்குடி,
செப்,13
டூனா பிஷ்ஷிங் வெஸ்ஸல்ஸ் பிஷ்ஷரிங் மல்டி ஸ்டேட் கூட்டுறவு சங்க லிமிடெட் திறப்புவிழா:
காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ். முரளிதரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
தூத்துக்குடி சிதம்பரநகர் 4-வது தெருவில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தை நேற்று 12/09/2022 திங்கள் கிழமை காலை வெகு சிறப்பாக திறப்பு விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடியில் புதிய கிளை அலுவலகமான டூனா பிஷ்ஷிங் வெஸ்ஸல்ஸ் பிஷ்ஷரிங் மல்டி ஸ்டேட் கூட்டுறவு சங்க திறப்புவிழா நடைபெற்றது.
இந்த திறப்பு விழாவிற்கு
மாநில காங்கிரஸ் துணைத் தலைவர்
ஏ.பி.சி.வி சண்முகம், மற்றும் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ். முரளீதரன் ஆகியோர் தலைமை தாங்கி
திறந்து வைத்தனர்.
இந்த
நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு கட்டுமான நலவாரிய உறுப்பினர் மகேஸ்வரன்,
சொர்ணமாலியா மல்டி ஸ்டேட் சேர்மன் சஜூ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவில், மாநகராட்சி 20-வது வார்டு கவுன்சிலர் எடின்டா, மற்றும் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலட்சுமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.
இந்த
நிகழ்ச்சியில், மேற்கு மண்டல காங்கிரஸ் தலைவர் செந்தூர்பாண்டி, மாவட்ட காங்கிரஸ் செயலாளர் கோபால், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பிரபாகர், தெற்கு மண்டல காங்கிரஸ் தலைவர் ராஜன், மனவை ரூஸ்வெல்ட் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்த கூட்டுறவு சங்க லிமிடெட் மூலம் மகளிர் குழுவை சேர்ந்தவர்களுக்கு லோன் வழங்குதல், மற்றும் நிரந்தர வைப்புத் தொகை, சிறுசேமிப்பு, தொழில் முனைவோருக்கான கடன் ஆகிய பல்வேறு வகைக்கான லோன்கள் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரையும்
டூனா பிஷ்ஷிங் வெஸ்ஸல்ஸ் பிஷ்ஷரிங் மல்டி ஸ்டேட் கூட்டுறவு சங்க லிமிடெட் சேர்மன் வழக்கறிஞர் எஸ். அரிநாராயணன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்! இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை சேர்மன், செகரட்டரி, மற்றும் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

