நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் செப்டம்பர் 12
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 154 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகைக்கான
ஆணையினையும், சீர்காழி வட்டம், பள்ளிவாசல் தெரு புதுப்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த முகமது யாசர் த/பெ அன்வர் அலி என்பவர் சௌதி அரேபியா நாட்டில் இறந்ததற்காக தமிழக அரசிடமிருந்து வரப்பெற்ற இழப்பீடுத்தொகை ரூ.30,612 க்கான காசோலையினை அவரது தந்தையார் அன்வர் அலி என்பவரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மேலும், நாகப்பட்டினம் நகராட்சி சூரியா நகரை சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கான ஆணை, வடக்குடி மேலத்தெருவை சேர்ந்த செல்வி, வடுகச்சேரி வடக்குத்தெரு கிராமத்தை சேர்ந்த அருண்மணி, நாகூர் மெயின்ரோடை சேர்ந்த நஜ்மா பேகம் ஆகிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்திர உதவிதொகைக்கான ஆணை போன்றவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.



இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) ராமன் மற்றும்; அரசு அலுவலர்கள்; கலந்த கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடாநாகை மாவட்ட செய்தியாளர்.

