நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் (பேரிடர்கால நண்பன்) ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான பேரிடர் காலப் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ், தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் உணவகத்தில் (பேரிடர்கால நண்பன்) ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான பேரிடர் காலப் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண் தம்புராஜ், தொடங்கி வைத்தார்.
இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அபாய குறைப்பு முகமை மூலமாக தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் பேரிடர்களை கையாள்வது தொடர்பாக 5500 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் 200 தன்னார்வலர்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், நிலச்சரிவு போன்ற பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட செஞ்சி;லுவை சங்கம், நேருயுவருந்திரா, ஊர்காவல்படை, தீயணைப்பு துறை மற்றும் வருவாய்த்துறை மூலமாக 200 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் இங்கு நடைபெறும் ஆப்தமித்ரா பயிற்சியினை மருத்துவர்கள், கல்லூரி பேராசியர்கள், தீயணைப்புதுறை அலுவலர்கள், தேசிய பேரிடர் மீட்பு துறை அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முதற்கட்டமாக 200 தன்னார்வலர்களுக்கு இன்றைய தினம் 12.09.2022 முதல் 23.09.2022 வரை 12 நாட்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி ஒரு பயனுள்ள பயிற்சியாகும் பேரிடர் தொடர்பான இப்பயிற்சி முடியும்போது நம் மாவட்டத்தை சேர்ந்த 200 தன்னார்வலர்களும் பேரிடர் தொடர்பான மீட்புபணியில் ஈடுபடதகுதியுள்ளவர்களாக இருப்பீர்கள். நம் மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் பேரிடர் ஏற்பட்டால் 200 நபர்களும் மீட்பு பணியில் ஈடுபட வேண்டும். இப்பயிற்சியின் போது ஒவ்வொரு தன்னார்வலருக்கும் டார்ச் லைட், லைப் ஐhக்கெட், பாதுகாப்பு கையுறை சுத்தி முதலுதவி பெட்டி, கேஸ் லைட்டர், விசில், தண்ணீர்பாட்டில், கொசுவலை, சீருடை, ரெயின்கோட், பாதுகாப்பு கண்ணாடிகள், பாதுகாப்பு தலைகவசம் உட்பட ரூ.9000 மதிப்பிலான 14 வகை மீட்பு உபகரணங்கள் வழங்கப்படஉள்ளது..
மேலும் பயிற்சியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு தன்னார்வலருக்கும் ரூ.1000 மதிப்பிலான காப்பீடு செய்யப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள அனைவரும் அனைத்து பேரிடர் தொடர்பான பயிற்சியினை சிறப்பான முறையில் பெற்று பேரிடர் இடர்பாடுகளின் போது பெற்ற பயிற்சியினை கொண்டு சிறப்பாக பணிகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

பயிற்சியில் கலந்துகொண்ட தன்னார்வலர்களுக்கு பேரிடர்கால பயிற்சிக்கான கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியர் வருவாய் நீதிமன்றம் வி.மதியழகன் நாகப்பட்டினம் வருவாய் கோட்டாச்சியர் ந.முருகேசன், ஒயிட் அறக்கட்டளை தொண்டு நிறுவனம் பேரிடர் மேலாண்மை தனி வட்டாச்சியர் க.ரமாதேவிமற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

