வேதாரண்யத்தில் பாரதியார் நினைவு தினம் கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் புகழஞ்சலி
வேதாரணியம் செப்டம்பர் 11
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் மகாகவி பாரதியாரின் 101 வது நினைவு தினத்தை ஒட்டி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில்
புகழ் அஞ்சலி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை வேதாரணியம் ராஜாஜி பூங்கா பேருந்து நிழலகம் அருகே நடைபெற்றது.இந்த மகாகவி பாரதியாரின் புகழ் அஞ்சலி நிகழ்விற்கு
கலை இலக்கியப் பெருமன்றத்தின் நாகை மாவட்டத் தலைவர் புயல் குமார் தலைமை வகித்தார்.
வேதாரணியம் கிளை அமைப்பின் தலைவர் தங்க குழந்தைவேலு முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் அம்பிகாபதி வரவேற்றார்.இந்த நிகழ்வில் மகாகவி பாரதியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது சமூக வளர்ச்சிக்கு எதிரான சக்திகளை முறியடிக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் நல்லாசிரியர் விருது பெற்ற சு. செல்வராசு, வீ. வைரக்கண்ணு ,மா. மோகனசுந்தரம் ,தலைமை ஆசிரியர் சு.பாஸ்கரன்,கவிஞர்கள் சௌமியா,அகிலா, சுகன்யா ,
ராமசுப்பிரமணியன், சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று பாரதியின் படைப்புகள் குறித்து பேசினார்.கவிஞர் கோவி ராசேந்திரன் பாரதியாரின் பாடலைப் பாடி புகழ் அஞ்சலி செலுத்தினார்.இந்த நிகழ்விற்கு
கலை இலக்கியப் பெருமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

