வேதாரண்யத்தை அடுத்த செம்போடை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் சுவாமி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
வேதாரணியம் செப்டம்பர் 12
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த செம்போடை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் சுவாமி அருள்மிகுபூர்ணாம்பிகா புஷ்களாம்பிகா சமேத ஸ்ரீ சொக்கநாதர் அய்யனார் சுவாமி ஆலய ஜீர்ணோத்தாரண புனாராவர்த்தன வர்ணகலாபரண அஷ்டபந்தன கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.இன்று காலை நான்காம் கால யாக பூஜை, மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை ,பிம்ப சுத்தி, ரஷாபந்தனம்,நாடி சந்தானம், தத்வார்ச்சனை மற்றும் மகா பூர்ணாஹூதி தீபாராதனை முடிந்து யாத்ரா தானம் கடங்கள் புறப்பட்டு
விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்று மாலை சுவாமி அம்பாள் வீதி உலா காட்சியும் இரவு வாண வேடிக்கை மற்றும் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்த அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்திற்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மின்சார வாரியத்தார் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.விழா ஏற்பாடுகளை செம்போடை கிராமவாசிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். இந்த கும்பாபிஷேகத்திற்கு சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள பக்த கோடி மெய்யன்பர்கள், கிராமப் பொதுமக்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

