வேதாரண்யத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
வேதாரணியம் செப்டம்பர் 11
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் அரிமா சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ,நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம்
இன்று வேதாரணியம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
நடைபெற்றது. இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு கண் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நோயாளிகள் அன்றைய தினமே பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.அவர்களுக்கு I.O.L லென்ஸ், அறுவை சிகிச்சை, மருந்து, உணவு, தங்கும் வசதி மற்றும் போக்குவரத்து செலவு அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது .அவர்களுக்கு அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாட்கள் கழித்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.இந்த இலவச கண் பரிசோதனை முகாமில்
240 பேர் கண் பரிசோதனை செய்துகொண்டார்கள்.

இதில் 34
பேர் கண் அறுவை சிகிச்சைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு
பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் வேதாரணியம் அரிமா சங்க தலைவர் பாஸ்கரன் செயலாளர் சுப்பிரமணியன் பொருளாளர் சுரேஷ்பாபு
வேதாரணியம் அரிமா சங்கத்தைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட ஆளுநர் PMJF S.வேதநாயகம் வேதாரணியம் அரிமா சங்கத்தின் சிறப்பு மாவட்ட தலைவரும்
வேதாரணியம் வர்த்தக சங்கத்தின் தலைவருமான MJF.
S.S.தென்னரசு மற்றும் வேதாரணியம் அரிமா சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

