நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் பனங்குடி ஊராட்சி சமத்துவபுரம் உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்கம் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் (ஆல்பெண்டசோல்) மாத்திரைகளை வழங்கினார்.
நாகப்பட்டினம் செப்டம்பர் 9 நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் பனங்குடி ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்கம் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் ஆல்பெண்டசோல் மாத்திரைகளை வழங்கினார்.தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் 09.09.2022 நடைபெற்றது. இன்றைய தினம் விடுபட்டவர்களுக்கு 16.09.2022 அன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது. 1-2 வயதுடையவர்களுக்கு அல்பெண்டாசோல் ½ மாத்திரை 2-19 வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20-30 வயதுடைய மகளிருக்கு அல்பெண்டாசோல் 1 மாத்திரை வழங்கப்படும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமில் 01-19 வயதுடைய 197757 குழந்தைகளுக்கும் 20-30 வயதுடைய 49622 மகளிருக்கும் சுமார் 250000 மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார மையங்கள் அங்கன்வாடி மையங்கள் பள்ளிகள் கல்லூரிகள் மூலம் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண்தம்புராஜ், தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதார பணிகள் விஜயகுமார் பனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா செந்தில்குமார் சமூக நல அலுவலர் தமீமுன்னிசா வட்டார மருத்துவர்இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடாநாகை மாவட்ட செய்தியாளர்.

