நாகப்பட்டினம் நகராட்சி காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் பார்வையிட்டார்.
நாகப்பட்டினம் செப்டம்பர் 7
நாகப்பட்டினம் நகராட்சி காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது.
ஒன்று இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவ குழந்தைகளிடம் உள்ள கற்றல் இடைவெளியைக் களைய இந்த எண்ணும் எழுத்தும் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முதல் வகுப்பு குழந்தைகள் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி முன்பருவக் கல்வியின் பருவ கல்வியின் அடைவுகளை பெறாமல் உள்ளனர். அத்தகைய அரும்புநிலை மாணவர்களுக்கு உடலியக்கச் செயல்பாடுகள் நுண் தசை பயிற்சி கவனக் குவிப்பு மற்றும் எழுத்துக்கள் சார்ந்த செயல்பாடுகள் அளிக்கப்படுகின்றன.



மொட்டு நிலையினருக்கு எழுத்து சொல் சார்ந்த செயல்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன. மலர் நிலையினருக்கு எழுத்து சொல் சிறு தொடர்கள் சார்ந்த செயல்பாடுகள் உள்ளன. ஆடல் பாடல் விளையாட்டுகள் செயல்பாடுகள் மூலம் கற்பதால் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றலில் ஈடுபடுகின்றனர். மேலும் கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள் மூலம் கற்பதால் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றலில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு கற்பதன் மூலம் மாணவர்களுக்கு மனதில் நிலைத்து நிற்கிறது. என்னும் எழுத்தும் வகுப்பறை வண்ணமயமாக இருப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கற்கின்றனர். அரசால் வழங்கப்பட்ட கற்றல் கற்பித்தல் உபகரணங்களை உள்ள தமிழ் எழுத்துக்கள் குறியீடு எழுத்துக்களை கற்பிக்க பயனுள்ளதாக உள்ளது. பாட அட்டைகள் கதைகளையும் நிகழ்வுகளையும் விளக்க பயனுள்ளதாக உள்ளது.
தமிழக அரசால் வழங்கப்பட்ட வடிவியல் வடிவங்கள், மணிகள், எண் அட்டைகள், கணித கட்டளை எளிமையாக்குகிறது. என்ணும் எழுத்தும் திட்டம் மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகைலும் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் மகிழ்வுடன் கற்றல் இடைவெளியை சரி செய்யவும் பயனுள்ளதாக உள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் வட்டார கல்வி அலுவலர் இளகோவன் பள்ளி தலைமையாசிரியர் இளமாறன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

