நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் மேலவாழக்கரை ஊராட்சியில் சிறப்பு மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் மற்றும் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி முன்னிலையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் மேலவாழக்கரை ஊராட்சி ஏர்வைகாடு கிராமத்தில் சிறப்பு மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவரஉ.மதிவாணன் மற்றும் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினரவி.பி.நாகை மாலி முன்னிலையில் நடைபெற்றது.
இம்மக்கள் தொடர்பு முகாமில் வருவாய்த்துறை, சமூக பாதுகாப்புத் திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை வேளாண்மை பொறியியல்துறை போன்ற அனைத்து துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் குறித்தும் அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் விளக்கமளித்தனர்.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது நம் மாவட்டத்தில் மாதம் ஒரு கிராமம் தேர்வு செய்து மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களது குறைகளை நிவர்த்தி செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் துறை சார்ந்த பல திட்டங்கள் பற்றி தொடர்புடைய அலுவலர்களே மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள். தமிழக அரசானது பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறது. அரசு அறிவிக்கும் திட்டங்கள், உதவிகளை பெற அறிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ள மக்களை சந்திக்கும் ஒரு நிகழ்ச்சியே இந்த மக்கள் நேர்காணல் முகாமாகும். இதுபோன்ற அரசின் நல திட்டங்கள் மற்றும் உதவிகளை அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் இம்முகாம் அமையும். இந்த ஊராட்சியில் உள்ள ஏர்வைகாடு கிராமத்தில் காவேரி கோட்டம் ஆற்றில் பாலம் கட்டுதல், சாலை அமைக்கவும், ஏர்வைகாடு முதல் ராமன்கோட்டகம் மற்றும் மரப்பள்ளம் வரை ஓரடுக்கு சாலை அமைக்கவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக அரசு அறிவிக்கும் எண்ணற்ற திட்டங்களை சரியான நபர்களுக்கு சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். மேலும், உண்மையான தகுதியுடைய மக்களுக்கு உதவும் வகையிலும் துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்களின் அறியாமையை போக்கும் வகையிலும் நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்களும் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களை தாமாகவே முன்வந்து அறிந்து அத்திட்டத்திற்கு தகுதியுடையவராக இருப்பின் பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இம்முகாமில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 1 பயனாளிகளுக்கு ரூ.8,500 மதிப்பீட்டில் சக்கர நாற்காலியினையும், சமூகப்பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 16 பயனாளிகளுக்கு மாதம் ரூ.1000 என 12 மாதத்திற்கு ரூ1,92,000 மதிப்பீட்டில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவிதொகை, விதவை உதவிதொகை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வருவாய் துறை சார்பில் 38 பயனாளிகளுக்கு ரூ.16,89,500 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாவினையும், வட்ட வழங்கல் அலுவலகத்தில் 3 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினையும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1,000 மதிப்பீட்டில் தாது உப்புக்கலவை, ஒருங்கினைந்த குழந்தை திட்டம் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.10,000 மதிப்பீட்டில் ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், தோட்டக்கலைத்துறை மூலம் பயன்பெறும் 4 பயனாளிகளுக்கு காய்கறி விதைகள் மற்றும் மரக்கன்றுகளையும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.7,950- மதிப்பீட்டில் தார்பாய் போன்ற நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 79 பயனாளிகளுக்கு சுமார் ரூ.19லட்சத்து 08ஆயிரத்து 950 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ பௌலின், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கு.ராஜன் வேளாங்கண்ணி பேருராட்சி துணை தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் மேலவாழக்கரை ஊராட்சிமன்ற தலைவர் தனபால் திருக்குவளை ஊராட்சிமன்ற தலைவர் எல்.பழனியப்பன் திருக்குவளை வட்டாட்சியர், கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பொது மக்கள் திரளாக கலந்துக்கொணடனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

