வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி கிராமத்தை சேர்ந்த குளுந்தாளம்மன் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.
வேதாரணியம் செப்டம்பர் 6 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி
குளுந்தாளம்மன் முனீஸ்வரர் கோயில் 65 வது ஆவணி ஆண்டு திருவிழாவில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்ட வடத்தினை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.வேதரத்தினம், எஸ் கே ராமசாமி, வேதாரண்யம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் பிடித்து துவக்கி வைத்தனர். நேற்று காலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் திருவிழா
துவங்கி அன்று பகல் முழுவதும் பல்வேறு இறை வழிபாடுகளுக்கு பிறகு மாலை ஸ்ரீ குளுந்தாளம்மன் திருத்தேர் பவனியும்
இரவு விடிய விடிய பல்சுவை கலை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு பின்னிரவில் சுவாமிகள் அக்கினிக்
கப்பரை யுடன் செல்லும் வீதி உலா திருக்காட்சி யுடன் இவ்வாண்டு தெய்வீக திருவிழா நிறைவுற்றது.



இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர்.
இந்தத் தேரோட்டத்திற்கு காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், மின்சாரதுறையினர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
இந்த திரு தேரோட்ட நிகழ்வினை மர வாளிகள் நிர்வாக குழுவினர் மற்றும் தேத்தாகுடி கிராமவாசிகள் செய்திருந்தனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

