துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவருக்கு வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் பாராட்டு.
வேதாரண்யம் செப்டம்பர் 7
தஞ்சாவூர் மாவட்டம் ஞானம் மெட்ரிக் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்
ஆரோன் பென்கர்
( வயது 17)
இவர் வேதாரணியத்தில் உள்ள நாகப்பட்டினம் மாவட்ட ரைபிள் கிளப் வீரராவார்.
இவர் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடந்த நாற்பத்தி எட்டாவது மாநில அளவிலான இரட்டை குழல் துப்பாக்கி சுடும் போட்டியில்
இரட்டை குழல் துப்பாக்கியில் இரட்டை தகடு சுடுவதில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
இவருக்கு
தேசிய துப்பாக்கி சங்கம் இந்தியா
(NRAI) யின்
தலைவரும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இணைச் செயலாளருமான டி.வி.சீதாராம் ராவ் அவர்களால் தங்கப்பதக்கம் அளிக்கப்பட்டது. தங்கப் பதக்கம் வென்ற மாணவர்
ஆரோன் பென்கரை
நாகை மாவட்ட. ரைபிள் கிளப் செயலாளரரும் கருப்பம்புலம் அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளருமான
பி.வி.ஆர்.
விவேக் வெங்கட்ராமன் பாராட்டினார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல் விஸ் லாய்
மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

