தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் இ.கா.ப பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு.
வருகின்ற 07.09.2022 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வரின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் இ.கா.ப அவர்கள் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் விமான நிலையத்தின் சுற்றுவட்டார பகுதிகளின் முக்கிய சாலைகள் போன்றவற்றிலும் தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் பொன்னி இ.கா.ப , தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் இ.கா.ப அவர்கள், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஷ் இ.கா.ப , விமான நிலைய காவல் ஆய்வாளர் உமாதேவி, தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

