வேதாரண்யம் செப்டம்பர் 6
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், தோப்புத்துறை, தேத்தாகுடி, தலைஞாயிறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருட்டு கும்பலைச் சேர்ந்த 2 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை சிவன் வடக்கு வீதியை சேர்ந்த சாகுல் அமீது, ஜின்னா
தேத்தாகுடி பகுதியை சேர்ந்த முருகானந்தம், நீர் மூளையை சேர்ந்த கோயில் நிர்வாக அலுவலர் ஆகியோரின் வீடுகளில் கடந்த ஒரு வருடத்தில்
40 பவுன் நகை மற்றும் வெளிநாட்டு டாலர்கள் திருட்டு போயின.
இன்று காலை தோப்புத்துறை சோதனைச்சாவடியில் வேதாரண்யம் காவல் ஆய்வாளர் சுப்ரியா தலைமையிலான தனிப்படையினர் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனையிட்டபோது அந்தக் காரின் உள் 20 பவுன் நகை மற்றும் 2 ஆயிரத்து 700 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .


அந்த காரில் இருந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த ராமஜெயம் மற்றும் திருவாரூர் எண்கண் என்ற இடத்தைச் சேர்ந்த குரு சக்தி ஆகியோரிடம் விசாரித்ததில் கடந்த ஓராண்டாக வேதாரண்யம் பகுதியில் நடந்த திருட்டில் சம்பந்தப்பட்ட இருப்பது முதற்கட்டவிசாரணையில் தெரியவந்தது .காவல்துறையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

