நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் அரசு உண்டு உறைவிட மாதிரிப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் செப்டம்பர் 5 நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் அரசு உண்டு உறைவிட மாதிரிப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்றவை என்கின்ற வள்ளுவரின் வாக்கினை மெய்ப்பிக்கும் விதம் மாணவர்களது கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறார்கள். தமிழக அரசு கல்வியில் பின்னடைவுக்கான காரணங்களை ஆராய்ந்ததில் சமூக பொருளாதார கலாச்சார காரணிகள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள், புலம் பெயர் தொழிலாளர்களது பிரச்சனைகள், ஊட்டச்சத்துக்குறைபாடு, போதிய அடிப்படை வசதிகள் இல்லாமை, பள்ளிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் வசதிகளின்மை, ஆசிரியர் பற்றாக்குறை போன்ற பலகாரணிகள் என்பது கண்டறியப்பட்டது. இவற்றை கருத்தில் கொண்டு நிதி அமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்தப்படி அரசு பள்ளிகளில் பயில்கின்ற மாணவர்கள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த இணை செயல்பாடுகள் கலை அறிவியல், விளையாட்டு ஆகிய அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வாய்ப்பு வழங்கும் விதம் உருவாக்கப்பட்ட சிறப்பு திட்டத்தின் மூலம் மாதிரி பள்ளிகளை அமைப்பது இந்த அரசின் நோக்கமாகும்.
அதனை செயல்படுத்தும் விதம் தமிழ்நாட்டில் கல்வியில் பின் தங்கிய 10 மாவட்டங்களை கண்டறிந்து அம்மாவட்டங்களில் 2021 -22 ஆம் கல்வி ஆண்டில் 10 மாதிரி பள்ளிகள் உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசு 24 கோடியே 55 இலட்சத்து 61 ஆயிரத்து 360 ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இம்மாதிரிபள்ளிகளில் 800 மாணவர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிறந்த உணவு, தங்குமிட வசதி, போக்குவரத்துவசதி, சிறந்த ஆசிரியர்களை கொண்டு கற்பித்தல் ஆகிய அனைத்து வசதிகளும் சிறப்பாக வழங்கப்பட்டதன் அடிப்படையில் இம்மாணவர்கள் ஏதாவது ஒரு போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.



மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்ததன் அடிப்படையில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் நம் மாவட்டம் உள்பட 15 மாவட்டங்களில் மாதிரிப்பள்ளிகளில் உருவாக்ப்பட உள்ளன. சென்னையில் சீர்மிகு பள்ளி ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது. நம் மாவட்டத்தில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் 40 40 ஸ்ரீ 80 மாணவர்கள் சேர்க்கைப்பட்டுள்ளனர். மற்றும் 11ஆம் வகுப்பு பயனும் மாணவ மாணவிகள் 40 40. 80மாணவர்கள் சேர்க்கைப்பட உள்ளனர்.
இவ்வாண்டு உறைவிட பள்ளிகளின் சீரிய நோக்கம் இங்கு பயிலும் மாணாக்கர்கள் சிறந்து கல்வி பயின்று அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் கலை மற்றும் மருத்துவம் ஆகிய சிறந்த தொழில் படிப்புகளில் சேர்வதாகும் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் புதிய கல்வி செயல்பாடுகளை உருவாக்கி அதன் மூலம் மாதிரி பள்ளியில் பயில்கின்ற ஒவ்வொரு மாணவரும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இந்தியாவின் ஆகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் அனைவரும் சேர்வதை உறுதிப்படுத்துவதே இம்மாதிரி பள்ளியின் இலக்காகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் குருக்கத்தி ஆசிரிய பயிற்சி நிறுவன முதல்வர் காமராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

