மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள
தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மைய கட்டிடத்தினை காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைக்கப்பட்டதனை தொடர்ந்து
மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர்அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் உடன் இருந்தனர்.
நாகப்பட்டினம் செப்டம்பர் 6 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மைய கட்டிடத்தினை இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டதனை தொடர்ந்து சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் உடன் உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்று துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மையம் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் என்ற அறிவிப்பை வெளியிடப்பட்டதை தொடர்ந்து இத்தோட்டகலை தகவல் மற்றும் பயிற்சி மையமானது புதிதாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இம்மையம் புதிய தொழில்நுட்பங்களை பரப்புதல் மற்றும் செயல் விளக்கங்கள் அமைத்தல் மற்றும் தோட்டக்கலைத் துறையின் திட்டங்களை முழுமையாக விவசாயிகளுக்கு சென்றடையும் வகையிலும் விவசாயிகளின் திறனை மேம்படுத்துவதற்காகவும் மாவட்ட தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார மையமாக விளங்கும் என சுற்றுச்சூழல் காலநிலை மாற்று துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் .
இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நாவாஸ் மாவட்ட ஊராட்சி தலைவர் ச.உமாமகேஸ்வரி நகரமன்ற தலைவர் இரா.மாரிமுத்து வேளாண்மை துறை இணை இயக்குநர் ஜாக்குலா அகண்டராவ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தோப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடாநாகை மாவட்ட செய்தியாளர்.

