வேதாரணியம் செப்டம்பர் 5
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலத்
(அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி) தில் ஆசிரியர் தினவிழா மற்றும் மாணக்கியர்க்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் நிர்வாக அறங்காவலர் கயிலைமணி அ.வேதரத்தினம் வரவேற்புரை ஆற்றவும்
வேதாரணியம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் மா.மீ அன்பரசு
தலைமை ஏற்று மாணக்கியர்க்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.


பின்னர் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு கஸ்தூரிபாய் காந்தி கன்யா குருகுலம் ஆசிரியைகள் கௌரவிக்கப்பட்டனர்.பின் மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.ஆசிரியை R.கார்குழலி நன்றி உரையாற்றினார். செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

