நாகப்பட்டினம் செப்டம்பர் 4 நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளுர் வட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா 29.08.2022 முதல் 08.09.2022 வரை நடைபெறுவதை முன்னிட்டு அதன் முக்கிய நிகழ்வான அன்னையின் பிறந்தநாள் விழா (விருந்து) 08.09.2022 அன்று நடைபெறுவதை முன்னிட்டு மேற்படி நாளன்று நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனவும் இதனை ஈடு செய்யும் விதமாக 24.09.2022 சனிக்கிழமை அன்று அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவித்தும், இவ்விடுமுறை உள்ளுர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881 இன் கீழ் அறிவிக்கப்படவில்லை, என்பதால் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு நாகப்பட்டினம் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு செயல்பட வேண்டும் எனவும்; மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண் தம்புராஜ், தெரிவித்துள்ளார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

