ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில், 2020-2021ம் கல்வி ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா 03.09.2022 அன்று வ.உ.சி. சிதம்பரம் கல்லூரியில் கல்லூரிக் கல்விக் குழுத் தலைவர் திரு. ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம், கல்லூரிச் செயலர் திருமதி சொ. சுப்புலெட்சுமி சொக்கலிங்கம் ஆகிய இருவரின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடைபெற்றது. துறைத்தலைவர்களின் அலங்கார அணிவகுப்பைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் பா. பால ஷண்முக தேவி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ப.மணிசங்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 668 இளங்கலை, இளம் அறிவியல் மாணவிகளுக்கும் 114 முதுகலை, முது அறிவியல் மாணவிகளுக்கும் 09 இளநிலை ஆய்வாளர்களுக்கும் பட்டங்கள் வழங்கி சிறந்ததொரு கருத்துரை ஆற்றினார். கல்வி வழி அதிகாரத்துணிவு, சிறந்த கல்வியை ஊக்குவித்தல் மூலம் நல்ல பண்புகளை சமுதாய அங்கத்தினருக்குள் புகுத்த முடியும் என்பதையும், சூழ்நிலை சார்ந்த வளர்ச்சியைக் கொடுத்து அவர்களிடமிருந்து வெற்றிக்கான விழுமியங்களை அமைப்பது குறித்தும் கருத்துரை அமைந்திருந்தது. பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை பேராசிரியர் முனைவர் தே. சண்முகப் பிரியா, பேராசிரியர் க. ஜோதிலட்சுமி, பேராசிரியர் த. செல்லம்மாள், பேராசிரியர் தா. சே. அனுஷ்யா பேராசிரியர் அந்தோணி செல்வப்பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.

