நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
வேதாரணியம் செப்டம்பர் 3 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தேத்தாக்குடி தெற்கு ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டட கட்டுமான பணிகள், குளிர்குளம், வண்ணான் குளம் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதையும், செட்டி தெரு சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், கோடியக்காடு ஊராட்சி காளியாப்பிள்ளை தெருவில் உள்ள குளம் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதையும், ஆதனூர் ஊராட்சியில் ரூ.28.92 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டட கட்டுமான பணிகளையும், கரியாப்பட்டினம் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கருப்பம்புலம் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி மைய கட்டட கட்டுமான பணிகளையும், வாய்மேடு ஊராட்சியில் உள்ள நந்தவனம் குளம் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், தேத்தாக்குடி தெற்கு ஊராட்சியில் சமுதாய கழிப்பறைகள், நாகக்குடையான் முதல் கத்தரிப்புலம் வரை சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தேத்தாக்குடி தெற்கு ஊராட்சியில் கருப்பம்புலம், ஆதனூர், வாய்மேடு, நாகக்குடையான் மற்றும் செட்டிப்புலம் ஆகிய ஊராட்சிகளில் வீடு கட்டும் கட்டுமான பணிகளையும், மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.பெரியசாமி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி செயற்பொறியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். செய்தி தொகுப்பு எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

