வேதாரண்யத்தில்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் டார்ச் லைட் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரணியம் செப்டம்பர் 2
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிபடி நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 2500 விலை அறிவித்து கொள்முதல் செய்திட வேண்டும் ஒன்றிய அரசு மின்சார திட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் சம்பா தாளடி பருவ காப்பீடு திட்ட இழப்பீட்டை அறிவித்து வழங்கிட கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் டார்ச் லைட் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக செங்குட்டுவன், வீரப்பன், பாண்டியன் ராமச்சந்திரன் ,தணிகையரசு,நாராயணன், மாரியப்பன் பழனியப்பன் ,ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோரிக்கை விளக்க உரை சிபிஐ நாகை மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன்
விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர் கே பாபுஜி ஆற்றினார்கள்.இறுதியில் அனைவரும் போராட்ட கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

