நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பாப்பாக்கோவில் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள அந்தனபேட்டை பெருமாள் கோயில் குளத்தில் நடைபெற்ற பேரிடர் மீட்பு செயல் விளக்க ஒத்திகை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் செப்டம்பர் 1
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பாப்பாக்கோவில் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள அந்தனபேட்டை பெருமாள் கோயில் குளத்தில் நடைபெற்ற பேரிடர் மீட்பு செயல் விளக்க ஒத்திகை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பேரிடர் காலங்களில் மனிதன் மட்டுமின்றி கால்நடைகளையும் உயிருடன் மீட்க நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, மின்சார துறை, கால்நடைதுறை என அனைத்து துறைகளும் ஒன்றாக இணைந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் மேற்பார்வையில் செயல் விளக்க பயிற்சி அளித்தனர். மழை, வெள்ளம், தீவிபத்து, சுனாமி, கட்டிடம் இடிந்து விழுதல் போன்ற இயற்கை பேரிடர் ஏற்படும் போது அதில் சிக்கியுள்ள மக்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றை உயிருடன் மீட்பது குறித்து அனைத்து துறையினர்களும் கலந்து கொண்ட செயல் விளக்கம் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின்படி தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனைத்து துறை அதிகாரிகள் உதவியுடன் பேரிடர் ஏற்படும் போது பொதுமக்களை எவ்வாறு உயிருடன் மீட்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மழை காலங்களில் சிக்கிய மக்களை அந்த பகுதியில் இருந்து மீட்டு பேருந்துகளில் அழைத்து சென்று அருகில் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைத்து உணவு வழங்குதல் போன்ற செயல் விளக்கத்தை செய்து காட்டினர்.


அதே போல் புயல் காலங்களில் மின்கம்பம் சாய்ந்து விழுந்தால் அதை மீண்டும் நேராக நிமிர்த்து மின் விநியோகத்தை சீர் செய்வது குறித்து மின்சார துறையினர் செய்து காட்டினர். அதிக மழை பெய்து வெள்ளம் ஏற்படும் போது சாலையில் சேதம் ஏற்பட்டால் அந்த சாலையை சீர் செய்வது மற்றும் சாலைகளில் விழுந்த மரங்களை உடனுக்குடன் அகற்றுவது குறித்தும் செய்து காட்டினர். பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகளை அடுக்கி வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து விடாமல் தடுத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வருவாய்த்துறையினர் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அங்குள்ள மக்களை மீட்டு தேவையான உணவுகள் வழங்கினர். இவ்வாறு அனைத்து துறைகளும் ஒன்றாக இணைந்து பேரிடர் காலங்களில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை உயிருடன் மீட்பது குறித்து பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினர். நாகை மாவட்டத்தில் 5 இடங்களில் இது போன்ற விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. பேரிடர் காலங்களில் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளையும் உயிருடன் மீட்க அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண்தம்புராஜ் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, நாகப்பட்டினம் வருவாய் கோட்டாச்சியர்.முருகேசன், வட்டாச்சியர். கார்த்திகேயன் பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

