வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம்
வேதாரணியம் ஆகஸ்ட் 31
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் அருள்மிகு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலய சிற்றம்பல விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.விநாயகர் ஊர்வலத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.வி. ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.




இந்த விநாயகர் ஊர்வலத்தில் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பேண்டு மேளதாளத்துடன் ஊர்வலம் நடைபெற்றது. இந்த விநாயகர் ஊர்வலத்தில் அருட்திரு D. நித்திய சகாயராஜ்
தாளாளர் புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வேதாரண்யம் ,கயிலை மணி அ.வேதரத்தினம் ஜான் முத்து,ஆரோ பால்ராஜ்,ஹமீது சுல்தான்,ஜெய்லானி
அப்சி என்கிற அப்சர் உசைன்,மையா ரபீக்,ஆப்கான், ஹாஜா , சங்கமன் கோவிந்தராஜ், பன்னீர்செல்வம், கனகராஜ் ,சிவப்பிரகாசம் ,ரவி, தங்கமணி,
வெங்கட், மகாலட்சுமி சால்ட் செந்தில் ,
அர்ஜுனன், விக்னேஷ்
மற்றும் ஏராளமானோர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.இந்த மாபெரும் விநாயகர் ஊர்வலம் கருப்பம்புலம் தெற்கு காடு கோவிலில் இருந்து புறப்பட்டு கருப்பம்புலம் வடகாடு மருதம்புலத்தில் கரைக்கப்பட்டது .
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

