நாகப்பட்டினம் ஆகஸ்ட் 30
நாகப்பட்டினம் மாவட்டத்தில் எதிர்வரும் 31.08.2022 அன்று கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவில் ஒரு பகுதியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள 250 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகள் மற்றும் கடற்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் 31.08.2022 மற்றும் 04.09.2022 அன்று கீழ்க்கண்ட விவரப்படி கரைக்கப்பட உள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தகவல்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் எதிர்வரும் 31.08.2022 அன்று கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவில் ஒரு பகுதியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள 250 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகள் மற்றும் கடற்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் 31.08.2022 மற்றும் 04.09.2022 அன்று கீழ்க்கண்ட விவரப்படி கரைக்கப்பட உள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் நகர காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஸ்ரீ நீலாயதாட்க்ஷி அம்மன் சன்னதியில் அமைந்துள்ள 32 அடி உயர விஸ்வரூப விநாயகர் சிலை ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் சன்னதியிலிருந்து 31.08.2022ஆம் தேதி இரவு 07.00 மணிக்கு தொடங்கி 4 வீதிகள் வழியாக சென்று அபிராமி அம்மன் திடல் ஸ்ரீ அகமது தெரு அண்ணாசிலை அரசு தலைமை மருத்துவமனை புதிய பேருந்து நிலையம் புதிய பேருந்து நியைலம் தர்ஹா காடம்பாடிஅரப்ஸா தர்ஹா பால்பண்ணைச்சேரி மற்றும் நாகூர் கடை தெரு வழியாக சென்று நாகூர் வெட்டாறு ஆற்றங்கரையில் கரைக்கப்படும்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் நகர காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சக்தி விநாயகர் குழு மூலம் 95 விநாயகர் சிலைகள் ஸ்ரீ சவுந்தர்ராஜ பெருமாள் சன்னதியிலிருந்து 04.09.2022ஆம் தேதி தொடங்கி ஐயப்பன் கோவில் சந்திப்பு தேவி திரையரங்கம் புதிய பேருந்து நிலையம் சந்திப்பு வழியாக 3 கி.மீ சென்று நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் கரைக்கப்படும்.
கீழ்வேளூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட 24 விநாயகர் சிலைகள் 31.08.2022ஆம் தேதி அருகில் உள்ள கடுவையாறு ஆற்றங்கரையில் கரைக்கப்படும்.
கீழையூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திருப்பூண்டியிலிருந்து 05 அச்சகர் விநாயகர் சிலைகள் 31.08.2022ஆம் தேதி காமேஸ்வரம் கடற்கரை பகுதியில் கரைக்கப்படும்.
திட்டச்சேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட 12 விநாயகர் சிலைகள் 31.08.2022ஆம் தேதி நடுகடையில் புறப்பட்டு நாகூர் வெட்டாறு ஆற்றங்கரையில் கரைக்கப்படும்.
திருக்கண்ணபுரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட 08 விநாயகர் சிலைகள் 31.08.2022ஆம் தேதி அருகில் உள்ள வெட்டாறு அரசலாறு ஆற்றங்கரையில் கரைக்கப்படும்.
வேளாங்கண்ணி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட 19 விநாயகர் சிலைகள் 31.08.2022ஆம் தேதி அருகில் உள்ள வேளாங்கண்ணி கடற்கரையில் கரைக்கப்படும்.
திருக்குவளை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட 05 விநாயகர் சிலைகள் 31.08.2022ஆம் தேதி அருகில் உள்ள வெள்ளையாறு மற்றும் அரிச்சந்திரா ஆற்றங்கரையில் கரைக்கப்படும்.
வலிவலம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட 06 விநாயகர் சிலைகள் 31.08.2022ஆம் தேதி அருகில் உள்ள வெள்ளையாறு மற்றும் பாண்டவை ஆற்றங்கரையில் கரைக்கப்படும்.
வேதாரண்யம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட 30 விநாயகர் சிலைகள் 31.08.2022ஆம் தேதி அருகில் உள்ள வேதாரண்யம் கடற்கரைகளில் கரைக்கப்படும்.
கரியாப்பட்டினம் காவல் நிலைய சரகத்திற்குட்பட் 09 விநாயகர் சிலைகள் 31.08.2022ஆம் அருகில் உள்ள புஷ்பவனம் மற்றும் வேதாரண்யம் கடற்கரைகளில் கரைக்கப்படும்.
வாய்மேடு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட 30 விநாயகர் சிலைகள் 31.08.2022ஆம் அருகில் உள்ள வெவ்வேறு ஆற்றங்கரை மற்றும் குளக் கரைகளில் கரைக்கப்படும்.
தலைஞாயிறு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட 17 விநாயகர் சிலைகள் 31.08.2022ஆம் அருகில் உள்ள அரிச்சந்திரா ஆற்றங்கரையில் கரைக்கப்படும்.
வேட்டைக்காரனிருப்பு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட 13 விநாயகர் சிலைகள் 31.08.2022ஆம் தேதி அருகில் உள்ள காமேஸ்வரம் மற்றும் புதுப்பள்ளி கடற்கரையில் கரைக்கப்டும்.
எனவே நாகப்பட்டினம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பொது வழிபாடு ஊர்வலம் ஆகியவற்றை சட்டம் ஒழுங்குடன் அமைதியான முறையில் சிறப்பாக நடத்திட பொது மக்கள் ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

