தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸார் ஏழை எளியவர்களுக்கு உணவுகள் வழங்கி, இனிப்புகள் கொடுத்து உற்சாகமாக கொண்டாடினார்கள். தூத்துக்குடி
மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிதம்பரநகர் 4வது தெருவில் உள்ள பாசகரங்கள் முதியோர் இல்லத்தில் காலை உணவு இனிப்புடன் வழங்கபட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் மற்றும் பனை வாரியத்தின் உறுப்பினர் எடிசன் தலைமை வகித்தார்
*மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் உணவு வழங்கினார்*
இதில் மண்டல தலைவர் ராஜன்,மாநகர் மாவட்ட துணை தலைவர் பிரபாகரன்,பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன்,மாநகர் மாவட்ட அமைப்பு சாரா தலைவர் நிர்மல்கிறிஸ்டோபர்,மாவட்ட செயலாளர்கள் முத்துராஜ்,முனியசாமி,வார்டு தலைவர்கள் தனுஷ், கிருஷ்ணன் வீரபாண்டி,மாவட்ட மீணவரனி துணை தலைவர் கென்னடிராஜ்,
உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுபோல் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும் காங்கிரசார் மற்றும் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தொகுதியில் பல்வேறு இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது

