வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளி தெற்கு காடு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
வேதாரண்யம் ஆகஸ்ட் 31
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம் பள்ளி தெற்கு காடு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் எனும் மூன்றிலும் சிறப்புடைய புண்ணிய ஷேத்திரமாகவும் நான்கு வேதங்களும் போதித்த ஸ்தலமாகவும் விளங்குகின்ற வேதாரணியம் எனும் புண்ணிய பூமிக்கு தெற்கு திசையில் அகஸ்தியம்பள்ளி 18 சித்தர்களுக்கு முதன்மையாக விளங்கும் அகஸ்தியர் மாமுனிவர் ஆலயத்தின் அருகாமையில் தெற்கு காடு கிராமத்தில் வேண்டுவோருக்கு வேண்டியபடி எழுந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தில்
இன்று காலை மகா பூர்ணாஹூதி தீபாராதனை காண்பிக்கப்பட்டு கடம்
புறப்பட்டு கோயிலை வலம் வந்து விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.



இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ஜி செல்வம் கிராம தலைவர் கிராமவாசிகள் பஞ்சாயத்தார்கள் மற்றும் விழா குழுவினர்
செய்திருந்தனர்.காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை காண சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் வந்திருந்தனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

