ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் ஒரு நாள் பயிற்சிப் பட்டறை
தென் தமிழகத்தில் கடற்கரை மாவட்டமான தூத்துக்குடியில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து தன்னிகரற்றுசெயல்பட்டுக்கொண்டிருக்கும் ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் ‘இயற்பியல் கண்காட்சியில் சாதனங்களின் அறிவியல் பார்வை’ எனும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சிப் பட்டறை 29.08.2022 அன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இயற்பியல் துறை தலைவி பேராசிரியர் சுய பத்ர ஹரிதா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் பால ஷண்முக தேவி தலைமையுரையாற்றினார்.
வ.உ.சிதம்பரம் கல்லூரி இயற்பியல் துறைத்தலைவர் மேனாள் ஸ்ரீராமன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு சாதனங்களின் அறிவியல் பார்வை குறித்து உரையாற்றி பயிற்சி வழங்கினார்.
அம்பிகா பயிற்சிபட்டறை மிகச்சிறப்பாக அமைய உதவிபுரிந்தார். இயற்பியல் துறை பேராசிரியர் சுதா பயிற்சிப்பட்டறைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். இயற்பியல் துறை மாணவி சத்யப்பிரியா நன்றியுரையாற்றினார்.
பயிற்சிக்கான ஏனைய ஏற்பாடுகளைத் துறைப் பேராசிரியர்கள் செல்வி மாரிசெல்வி, முனைவர் ரத்னா, செல்வி சங்கரவடிவு ஆகியோர் செய்திருந்தனர்.

