நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 29
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 185 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து நாகப்பட்டினம் வட்டம், செல்லூர் கிராமம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மாற்றுதிறனாளி எஸ்.முபாரக் என்பவருக்கு மாற்றுதிறனாளி நலத்துறை சார்பில் ஊன்றுகோலையும், ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுதிறனாளி சத்யா என்பவருக்கு மாற்றுதிறானாளிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்குவதற்கான ஆணையினையும், பாலையூர் கிராமத்தை சேர்ந்த மாரியம்மாள் பக்கிரிசாமி என்பவருக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணையினையும், மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சு.இராமன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

