நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடிகள் குறித்த பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வெளியிட்டார்.
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 29
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 03 சட்டமன்றத்தொகுதிகளுக்கு உட்பட்ட கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 651 வாக்குச்சாவடிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மேலும் 1500க்கு மேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்தல், வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் மற்றும் வாக்குச்சாவடிகள் இடம் மாற்றம் போன்ற மறுசீரமைப்பு தொடர்பாக கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் 14.09.2022க்குள் தெரிவித்திட அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

