வேதாரண்யத்தை அடுத்த கைலவனம் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஊர் குளம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
வேதாரணியம் ஆகஸ்ட் 29
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கைலவனம் பேட்டை ஊர் குளம் மாரியம்மன் கோயிலில் கைலவனம் பேட்டை அறங்காவலர் குழுத் தலைவர் T. வெங்கடாஜலபதி மற்றும் குழுவினர் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக சென்று கோபுர உச்சியில் புனித நீர் ஊற்றி நடைபெற்றது.இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

