வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளி புனித செபஸ்தியார் ஆலய திருத்தேர் பவனி
வேதாரணியம் ஆகஸ்ட் 28
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளி புனித செபஸ்தியர் ஆலயத்தில்
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித செபஸ்தியார் திருத்தேர் பவனி நடைபெற்றது. 19.08.2022 ல் புனித செபஸ்தியார் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நவநாள் உபயதாரர்கள் மூலம் தினமும் திருப்பலி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை அருட்திரு ச. .சான் கென்னடி பங்குத்தந்தை கடினல்வயல் அருட்திரு D. நித்திய சகாயராஜ்
தாளாளர் புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வேதாரணியம் ஆகியோரால் கூட்டுப்பாடல் திருப்பலியும் அதனைத் தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித செபஸ்தியார், ஆரோக்கிய மாதா, காவல் சமனசு ஆகியோரின் திருத்தேர் பவனி பேண்ட் இசை முழங்க, பலவித வாணவேடிக்கை களுடன் முக்கிய வீதிகள் வழியாக வந்து ஆலயத்தை வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.



இந்த திருத்தேர் பவனி மற்றும் விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும்
அகஸ்தியம்பள்ளி மாதா கோயில் தெரு தலைவர் மற்றும் கிராமவாசிகள் கடினல்வயல் பங்கு அருட்சகோதரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.மின்சார வாரியம் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இந்த திருத்தேர் பவனியயை அகஸ்தியம்பள்ளி மாதாகோவில் தெரு இறைமக்கள் ஏராளமானோர் வந்து கண்டு களித்தனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

