தூத்துக்குடி ஆகஸ்ட்,27
ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழக பொன்விழா, மற்றும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகரில் ஐம்பது ஆண்டுகள் வெற்றிகரமாக பயணித்து சாதனைகள் பல படைத்துள்ள ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழக பொன்விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியானது தூத்துக்குடியில் இன்று (27.08.2022) பாஸ்கரா திருமண மஹாலில் வைத்து நடைபெற்றது.
பொன்விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு ஐம்பது ஆண்டுகள் வெற்றிகரமாக பயணித்து சாதனைகள் பல படைத்துள்ள ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழக பொன்விழா மலர் புத்தகத்தை வெளியிட்டார். வணக்கத்துக்குரிய மேயர் ஜெகன் பெரியசாமி பெற்றுக் கொண்டார்.
அமைச்சர் பேசுகையில் :- இந்த ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழகம் பல சாதனைகள் பல புரிந்துள்ளது. இந்த அமைப்பில் உள்ள அனைவரும் விவிஜபி கள் தான், இந்த ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழகத்திற்கு என் தந்தை பல உதவிகள் செய்து இருக்கிறார்கள் என்று கூறினார்கள், இந்த அரசு விளையாட்டு துறைக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்யும் என்பதையும், மாநகராட்சி பகுதிகளில் பல பிரச்சனைகள் குறித்து எனக்கு தொலைபேசி வாயிலாக தொடர்ந்து அழைப்பு வரும், தற்போது அவை குறைந்து இருக்கிறது.

மாநகராட்சி பகுதிகளில் இரவு பகல் பாராமல் நம் வணக்கத்துக்குரிய மேயர் அவர்கள் அயராது உழைத்து கொண்டு இருக்கிறார். நம் மாநகராட்சி வார்டுகளில் திமுக கவுன்சிலர்கள் அதிகமாக இருக்கிறார்கள், அவர்களே பல்வேறு பிரச்சனைகளை பார்த்து கொள்கிறார்கள்.
அதனால் தற்போது எனக்கு எந்த தொலைபேசி அழைப்பும் வருவதில் அந்த அளவிற்கு மாநகராட்சி மேயர், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்.
திமுக அரசானது தொடர்ந்து விளையாட்டு துறைக்கு பல்வேறு உதவிகள் செய்யும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமைச்சர் கூறினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், முன்னாள் எம்.பி.ஜெயசீலன், தலைவர் மெரைண்டோ, பொருளாளர் ஆரோக்கியராஜ், உறுப்பினர்கள் சார்ச் கென்னடி, ஜெரி, பாலன், ஆரோக்கியராஜ், மற்றும் கால்பந்து கழக நிர்வாகிகள், மற்றும் கால்பந்து வீரர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டுள்ளார். இறுதியில் கால்பந்து வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் கோப்பை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கினார்கள்.

