தூத்துக்குடியில்
35 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல், மற்றும் லாரி பறிமுதல்.!
மாநகராட்சி கவுன்சிலர் கணவர் கைது!.
ஏ.எஸ்.பி.சந்தீஸ் அதிரடி நடவடிக்கை!!!
தூத்துக்குடி ஆகஸ்ட்,27
தூத்துக்குடி சிப்காட் அருகே கலப்பட டீசல் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி ரூரல் ஏ.எஸ்.பி.சந்தீஸ் தலைமையில், சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப் இன்ஸ்பெக்டர் அந்தோனிராஜ், போலீஸ் ஏட்டுகள் மாணிக்கராஜா, சாமுவேல், கணேஷ், செந்தில், முத்துப்பாண்டி, திருமணி டென்சிங் மகாலிங்கம் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் சிப்காட் அருகே உள்ள குடோனில் சென்று பார்க்கையில் அங்கு சந்தேகத்திற்கு இடமான நின்று கொண்டிருந்த லாரியை பிடித்து சோதனை செய்ததில் அவை பெங்களூரிலிருந்து தூத்துக்குடி 35,000 லிட்டர் கலப்பட டீசல் ஏற்றி வந்து விற்பனைக்காக வைத்து இருந்தது தெரிய வந்துள்ளது.
உடனே கலப்பட டீசல் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மேலும் நாங்குநேரியைச் சேர்ந்த பூல்பாண்டியன் மகன் ராஜகோபால் (42), குடியாத்தம் வேணுகோபால் மகன் புஷ்பராஜ் (27), தூத்துக்குடி அம்பேத்கர் நகர் ஆல்பர்ட் மகன் பிரவீன் (27), நெல்லை மேலப்பாளையம் குறிஞ்சி மகன் ராமசாமி (30), தூத்துக்குடி ராஜகோபால் நகர் தியாகராஜன் மகன் பவுல் அந்தோணி (35), குருஸ்புரம் டெலிங்கர் மகன் டேனியல் (44), ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், திரேஸ்புரம் வேலு (32), போலீசார் தேடி வருகின்றனர்.
குருஸ்புரம் டெலிங்கர் மகன் டேனியல் திமுக 24வது வார்டு கவுன்சிலர் மெட்டில்டா கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி துறைமுகத்தை மையமாக வைத்துக்கொண்டு மீன்பிடி விசைப்படகுகளுக்கு குறைந்த விலையில் கலப்பட டீசல்கள்
சப்ளை செய்யப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது. இந்த கலப்பட டீசல் பயன்படுத்துவதால் இன்ஜின் உடனடியாக பழுதாகும் என்பது தெரிந்து வரும் நிலையில் சிலர் விலை குறைவு காக கலப்பட டீசலை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. ஆகையால் தூத்துக்குடியில் கலப்பட டீசல் விற்பனை களைகட்டி வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ள நிலையில் போலீசார் தற்போது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஏஎஸ்பி சந்திஸ் போன்று நடவடிக்கை எடுத்தால் தூத்துக்குடியில் கலப்பட டீசல் விற்பனை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

