நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் இளைஞர் திறன் திருவிழா 2022 மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி ஆகியோர்; தொடங்கி வைத்தனர்.
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 27
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் இளைஞர் திறன் திருவிழா 2022 மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி அவர்கள் முன்னிலை வகித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக இளைஞர்களின் வாழ்வதாரத்தை முன்னேற்றிடும் வகையில் நல்ல பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக இன்று நடைபெறும் இளைஞர் திறன் திருவிழாவானது தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ் தமிழக அரசால் நடத்தப்டுகிறது. இந்த விழாவின் நோக்கம் இளைஞர்களின் மத்தியில் திறன் பயிற்ச்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் தகுதி மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப தகுதியான வேலைவாய்ப்பு அல்லது சுயதொழில் செய்வதற்கான வழிவகை ஏற்படுத்தி தருவதாகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதற்கட்டமாக நாகப்பட்டினம் வட்டாரத்தில் 02.07.2022 அன்று தொடங்கப்பட்ட இளைஞர் திறன் திருவிழாவில் கலந்துகொண்ட 535 இளைஞர்களில் 279 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்திட 11 பயிற்சி நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது இன்றைய தினம் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று 520 இளைஞர்களில் 213 இளைஞர்களுக்கு 13 நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . இப்பயிற்சி திட்டத்தின் மூலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மார்ச் 2022 வரை 2167 இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அவர்களின் 1660 நபர்கள் வேலைவாய்ப்பினை பெற்று பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.



இந்நிகழ்ச்சியில் 74 இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி சேர்க்கைக்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பாலமுருகன் உதவி திட்ட அலுவலர் பா.பாலன் , பேரூராட்சி மன்ற தலைவர் இந்திராகாந்தி சேகர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் கலந்துகொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடாநாகை மாவட்ட செய்தியாளர்.

