நாகப்பட்டினம் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 26 நாகப்பட்டினம் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் நகராட்சி மூலதன மானிய நிதியின் கீழ் காடம்பாடி மற்றும் பப்ளிக் ஆபிஸ் ரோடு பகுதியில் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் 4,200 மீட்டர் தூரம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினையும், அக்கரைக்குளம் பகுதியில் ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் 34 மீட்டர் நீளத்திற்கு பாலம் மற்றும் 200 மீட்டர் நீளத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதையும், பழைய பேருந்து நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் தார் சாலை, சுற்றுசுவர், தட்டுஒடு பதித்தல், மின்விளக்கு அமைத்தல் போன்ற அபிவிருத்தி பணிகள் நடைபெறுவதையும், தமிழ்நாடு சாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாணயக்காரத்தெருவில் ரூ.0.14 கோடி மதிப்பீட்டில் 173 மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதையும், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் ஆசாத் மார்கெட் கட்டும் பணி நடைபெறுவதையும்; மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து 15வது நிதிகுழ மானிய நிதியிலிருந்து பழந்தெரு மற்றும் சாமந்தான் பகுதியில் தலா.ரூ.0.25 கோடி மதிப்பீட்டில் நகர்நல மைய கட்டடம் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், பள்ளி சத்துணவு திட்டத்தின் கீழ் ரூ.0.23 கோடி மதிப்பீட்டில் 120 ச.மீ அளவுள்ள ஒருங்கிணைந்த சமையற்கூட கட்டடம் கட்டும் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.0.025 கோடி மதிப்பீட்டில் வள்ளியம்மை நகரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும், பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் நாகூர் கௌதிய பள்ளிக்கு 4 புதிய வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும், நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ரூ.0.80 கோடி மதிப்பீட்டில் நாகூர் அருகாமையில் வசதியற்றவர்கள் தங்குவதற்கான கட்டடம் கட்டும் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் என்.ஸ்ரீதேவி, நகராட்சி செயற்பொறியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர் .

