நாகப்பட்டினத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் விழா
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 26
நாகப்பட்டினம் மாவட்டம் நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் மற்றும் சாமந்தான் பேட்டை கிராமத்தில் உள்ள 307 பயனாளிகளுக்கு சுமார் 9 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா ஆகிய நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் தெரிவித்ததாவது
மாண்புமிகு தமிழக முதல்வர் பள்ளி மாணவர்களின் நலனை கருதிற்கொண்டு பல்வேறு நல்லதிட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அவற்றில் நாகப்பட்டினம் மாவட்டம் நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டிற்கு ரூ.3,75,26,163 மதிப்பிட்டிலான 3717 மாணவர்கள் மிதிவண்டிகளும், 3664 மாணவிகளுக்கு மிதிவண்டிகளும் வழங்கப்படவுள்ளது. ஆண் மிதிவண்டியின் விலை ரூ.5,175 பெண் மிதிவண்டியின் விலை ரூ.4,992 மொத்தம் 7381 மிதிவண்டிகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் நான் முதல்வன் என்ற மாணவர்களின் உயர்கல்விக்கான திட்டமிடுதல் சார்ந்து நான் முதல்வன் என்ற திட்டம், குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2414 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 36,169 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மேலும் மாவட்டங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், பள்ளியின் சுற்றுச்சூழல் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் மாணவர்கள் பயமின்றி தேர்வினை எதிர்கொள்ளவும், தேர்ச்சி சதவீதத்தை அதிகப்படுத்தவும் பள்ளிக்கல்வி துறையின் வாயிலாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் குறைகள் மற்றும் பாலியல் ரீதியான புகார்களை தெரிவிக்க பள்ளிதோறும் புகார் பெட்டிகள் அமைக்கப்பட்டு அதற்கான திறவுகோல் மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டும் புகார்களுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்; சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, காவல்துறை, குழந்தைகள் நலன் மற்றும் மேம்பாட்டு துறை ஆகியோர் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டு போதை பழக்கத்தின் தீமையினை உணர்த்தும் வண்ணம் பல்வேறு போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுவருகின்றன.
மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க சிறப்பு ஊக்கத்தொகை 176 பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு முறையே தலா ரூ.1,500 மற்றும் ரூ.2,000 வீதம் தொகை வழங்கப்பட்டுவருகிறது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2021- 2022 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற தேசிய வருவாய்வழி மற்றும் படிப்பு உதவித்தொகை தேர்வில் 48 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வருமானம் ஈட்டும் தாய் தந்தையர் விபத்தில் இறந்தால் அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அக்குடும்பத்தை சார்ந்த மாணவர்களுக்கு 01 முதல் 12 ஆம் வகுப்பு வரை வழங்கப்படும் நிதி ரூபாய். 50,000 மற்றும் 75,000 ஆகும். இதுவரை மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 76 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மற்ற மாநிலங்களை விட உயர் கல்வி பயிலும் மாணவர்களின் சதவீதம் 54 சதவீதமாக உயர்ந்துள்ளது. என மாண்புமிகு சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து, நாகப்பட்டினம் நகராட்சி சாமந்தான்பேட்டை கிராமத்தில் வருவாய் துறை சார்பில் 307 பயனாளிகளுக்கு சுமார் 9 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாவினை மாண்புமிகு சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.



இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர். ஜெ.முகமது ஷா நாவஸ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி மாவட்ட ஊராட்சி தலைவர் ச.உமாமகேஸ்வரி தனிதுணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கு.இராஜன் நாகப்பட்டினம் வருவாய் கோட்டாச்சியர் ந.முருகேசன் வட்டாச்சியர் கே.கார்த்திகேயன் நாகப்பட்டினம் நகரமன்ற தலைவர் இரா.மாரிமுத்து மாவட்ட கல்வி அலுவலர் தி.திருநாவுகரசு. மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

