கிராம புற பெண்களை தரையில் அமர வைத்து நடைபெற்ற விளாத்திகுளம் வட்டார களஞ்சிய விழா..
விளாத்திகுளம் வட்டார களஞ்சிய விழா விளாத்திகுளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
இவ்விழாவில் விளாத்திகுளம் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராம புற பெண்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களை தரையில் அமர வைக்கப்பட்டனர். போதுமான சேர் வசதிகள் இருந்தும் தரையில் அமர வைத்து விழா நடத்தப்பட்டது.
விழா ஒருங்கிணைப்பு குழுவினர், சிறப்பு அழைப்பாளர்கள் மட்டும் மேடை மற்றும் இதர பகுதியில் சேரில் அமர வைக்க பட்டனர்.

தரையில் அமர்ந்து இருந்த பெண்கள், முதியவர்கள் அமர முடியாமல் திணறி வந்தனர்.
பெண்களை தரையில் அமர வைத்து விட்டு நிர்வாகிகள் மட்டும் சேரில் அமர்ந்து இருந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

